யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி சேதம்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி சேதம்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 5:00 pm

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். நீதவான் பொ.சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 24 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களில் மூன்று சந்தேகநபர்களை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய 21 சந்தேகநபர்களையும் இம்மாதம் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்