முச்சக்கரவண்டி உரிமையாளர்களிடையே மோதல்: கைதான 12 இளைஞர்கள் சரீரப் பிணையில் விடுதலை

முச்சக்கரவண்டி உரிமையாளர்களிடையே மோதல்: கைதான 12 இளைஞர்கள் சரீரப் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 5:21 pm

மாத்தளை, உன்னஸ்கிரிய பகுதியில் அண்மையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 12  இளைஞர்கள் இன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களான 12  இளைஞர்களும் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை நிபந்தனையுடன் விடுவிப்பதற்கு நீதவான் சம்பத் கமகே அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி உன்னஸ்கிரிய பகுதியில் வாடகை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சிலரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மூவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த 12  இளைஞர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் 12 பேரையும் கடும் நிபந்தனையுடன் தலா இரண்டரை இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்