பெரும்போகத்தின்போது கொள்வனவு நெல்லை தனியார் துறையினரிடம் விற்பனை செய்ய தீர்மானம்

பெரும்போகத்தின்போது கொள்வனவு நெல்லை தனியார் துறையினரிடம் விற்பனை செய்ய தீர்மானம்

பெரும்போகத்தின்போது கொள்வனவு நெல்லை தனியார் துறையினரிடம் விற்பனை செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 8:36 am

கடந்த பெரும்போகத்தின்போது கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 30 ஆயிரம் மெற்றிக் தொன் சம்பா நெல்லை தனியார் துறையினரிடம் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விலை மனுக் கோரல் நடைமுறையின்கீழ் நெல் விற்பனை செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

களஞ்சியசாலைகள் பற்றாக்குறையால் தற்போது ஏற்படுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காணும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் அரசாங்கத்தின் நிர்ணய விலையின்கீழ் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை முறையாக இடம்பெறுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

களஞ்சியசாலை வசதிகள் இன்மையால் அதிகளிலான நெல்லை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்வனவு நடவடிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கடந்த சில தினங்களாக விவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்