புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம்

புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம்

புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 8:29 am

புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர் .

நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எம். கோடாபாய ஜயரத்ன தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் செயலாளராக செயற்படவுள்ளார்

பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.வி.நாரம்பனாவிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.எம்.பந்துசேன கல்வி அமைச்சின் செயலாளராகவும் டபிள்யூ.எஸ்.கருணாரத்ன பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராக ஜீ.எஸ் விதானகேவும் நீதி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜெயமான்னவும் நியமனம் பெற்றனர்.

உபாலி மாரசிங்க சுகாதாரம் , போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக காமினி ராஜகருணாவிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஏ.எம்.ஜயவிக்ரம செயற்படவுள்ளார்.

கலாநிதி டி.எம்.ஆர்.பி திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராவார்.

விவசாய அமைச்சின் செயலாளராக பீ.விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளராக எல்.பீ படகொடவும் எல்.பீ.ஜயம்பதி துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கபட்டுள்ளனர்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக எம்.ஐ.றாபிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமை்சசின் செயலாளராக சீ.வாகிஸ்வரவும் மாநாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக என்.ரூபசிங்கவும் நியமனத்தை பெற்றுள்னர்.

கருணாசேன ஹெட்டியராச்சி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராவார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.ஆர்.அதிகாரியும் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக டி.சி திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டபிள்யூ.கே.கே.அத்துகோரல வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளராவார்.

ஜகத் ஜயவீர சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்