நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பிரியந்த ரத்நாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பிரியந்த ரத்நாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 9:25 pm

காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பிரியந்த ரத்நாயக்கவின் பூதவுடல் அவரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சமூக சிந்தனையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக நேற்று அதிகாலை கெமராவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பிரியந்த ரத்நாயக்கவிற்கு மீண்டும் வீடு திரும்பும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

மின்னேரியா சமகிபுர பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு இலக்காகி கடும் காயங்களுக்கு உள்ளான பிரியந்த பின்னர் உயிரிழந்தார்.

46 வயதான பிரியந்த ரத்நாயக்க மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

பிரியந்த ரத்நாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அதிகளவிலான மக்கள் இன்று அங்கு சென்றிருந்தனர்.

நீண்ட காலமாக தாம் இப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பிரியந்த ரத்நாயக்கவின் இறுதிக்கிரியைகள் நாளை (10) பிற்பகல் ரஜஎல பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்