நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: மாம்பழத் திருவிழாவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: மாம்பழத் திருவிழாவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 10:06 pm

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற தண்டாயுதபானி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

மஹோற்சவத்தின் 22 ஆம் நாளான இன்றைய மாம்பழத் திருவிழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாரதரின் ஞானப்பழத்தைப் பெறுவதற்காய் பிள்ளையாரும் முருகப்பெருமானும் பிரயத்தனம் செய்த புராணக் கதையை சித்தரிக்கும் நோக்கிலேயே மாம்பழத் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

நாளொரு கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நல்லைக் கந்தனின் மாம்பழத் திருவிழாவைக் காண பெருந்திரளான பக்தர்கள் குழுமியிருந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தில் முதன்மை பெறுகின்ற இரதோற்சவத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: மாம்பழத் திருவிழாவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்

Posted by Newsfirst.lk tamil on Wednesday, September 9, 2015


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்