தெமட்டகொடையில் விசேட போக்குவரத்துத் திட்டம்

தெமட்டகொடையில் விசேட போக்குவரத்துத் திட்டம்

தெமட்டகொடையில் விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 1:45 pm

கொழும்பு தெமட்டகொடை வெல்லம்பிட்டி பகுதியில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் எண்ணெய் களஞ்சியசாலைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள வீதியின் ஒரு வழித்தடம் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.

பேஸ்லைன் வீதியின் தெமட்டகொட பகுதியில் இருந்து வெல்லம்பிட்டியை நோக்கி அனைத்து வாகனங்களும் பயணிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் இருந்து தெமட்டகொடை பேஸ் லைன் வீதி வரை பயணிகள் போக்குவரத்து பஸ்களை மாத்திரமே செலுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய அனைத்து வாகனங்களும் கொலன்னாவவையில் இருந்து அவிசாவளை பழைய வீதி ஊடாக வெல்லம்பிட்டிக்கு சென்று ஒருகொடவத்தை வழியாக பேஸ்லைன் வீதியை சென்றடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது>

கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேஸ் லைன் வீதியூடாக செலுத்தப்படவேண்டும் எனவும் அங்கிருந்து வௌியேறும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியூடாக தெமட்டகொடை பகுதிநோக்கி பயணிக்க முடியும் எனவும் பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்