சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நல்லூரில் கையெழுத்து வேட்டை: 6 ஆவது நாளாக தொடர்கிறது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நல்லூரில் கையெழுத்து வேட்டை: 6 ஆவது நாளாக தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 9:11 pm

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூரில் இன்று கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

”சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கையெழுத்துக்கள் சேரிக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்