சரண குணவர்தன பிணையில் விடுதலை

சரண குணவர்தன பிணையில் விடுதலை

சரண குணவர்தன பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2015 | 1:31 pm

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதம நீதவான் ரிக்கிரி கே ஜயதிலக்க முன்னிலையில் சந்தேகநபரான முன்னாள் பிரதி அமைச்சர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சரண குணவர்தன தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதி ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையிலான நேரத்தில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் முன்னாள் பிரதி அமைச்சருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் காலத்தில் கம்பஹா நீதிமன்றக் கட்டடத் தொகுதி அருகே ஒருவர்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சரண குணவர்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்