ஒன்பது வகையான இறக்குமதி உணவுப் பொருட்களின் விசேட வர்த்தக தீர்வை மீளாய்வு

ஒன்பது வகையான இறக்குமதி உணவுப் பொருட்களின் விசேட வர்த்தக தீர்வை மீளாய்வு

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 7:29 pm

சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட 9 வகையான இறக்குமதி உணவுப் பொருட்களுக்கான விசேட வர்த்தக தீர்வை நேற்று (08) நள்ளிரவு முதல் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு அறவிடப்படும் விசேட வர்த்தக தீர்வை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கின் அறுவடைக்காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் புதிய விசேட வர்த்தக தீர்வை 40 ரூபா என புதிய தீர்வை மீளாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் புதிய விசேட வர்த்தக தீர்வை நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராமின் புதிய வர்த்தக தீர்வை 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் கௌப்பி ஒரு கிலோகிராமின் புதிய தீர்வை 70 ரூபாவாகவும், பருப்பு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றிற்கு புதிதாக 2 ரூபா விசேட வர்த்தக தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் குரக்கனுக்கான புதிய விசேட வர்த்தக தீர்வை 70 ரூபாவாகும்

இறக்குமதி செய்யப்படும் மாஜரின் ஒரு கிலோகிராமுக்கான புதிய விசேட வர்த்தக தீர்வை 175 ரூபாவாகும்.

இதேவேளை, பச்சைப் பட்டாணி உட்பட மேலும் சில தானியங்களுக்கான விசேட வர்த்தக தீர்வையும் நேற்று நள்ளிரவு முதல் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்