இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான தீர்வை அதிகரிப்பு

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான தீர்வை அதிகரிப்பு

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான தீர்வை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Sep, 2015 | 4:05 pm

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமிற்கு 10 ரூபாவினாலும், சீனி ஒரு கிலோகிராமிற்கு 12 ரூபாவினாலும் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சீனிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு சந்தையில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் தீர்வையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்