இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2015 | 7:59 am

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம்  ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சிவிப்பாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த மாதம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பயிற்றுநராக அவர் செயற்படவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் மாவன் அத்தபத்து கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்​கே ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் மித வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட  ஜெரோம் ஜயரத்ன இலங்கை கிரிக்கெட் நிறுவன பயிற்றுநர்களின் பிரதானியாகவும் கடமையாற்றி வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்