ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் நடைபெற்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2015 | 1:05 pm

ஐக்கியத் தேசியக் கட்சியின் 69 ஆண்டு பூர்த்தி விழா சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையலுவகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார்

ஏனைய சில அரசியல் கட்சியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

வீடமைப்பு , புதிய தொழிற்துறையை ஏற்படுத்துதல் மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையிலிருந்து தீர்வு பெற்ற இலங்கையை உருவாக்குவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தேசிய அரசாங்கம் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்