கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள பாதுகாப்பு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள பாதுகாப்பு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள பாதுகாப்பு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2015 | 7:45 am

கொழும்பில் இன்று (01) ஆரம்பமாகவுள்ள பாதுகாப்பு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் ஐந்தாவது தடயைாகவும் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் 62 பேர் அடங்களாக 350 அதிதிகள் இம்முறை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்,

மாநாட்டின் பிரதம விருந்தினராக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சவால்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் ஒன்பது அமர்வுகள் நடைபெறவுள்ளன.

60 நாடுகளைச் சேர்ந்த 160 பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 2011 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாதுகாப்பு மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்