எட்டாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

எட்டாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

எட்டாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2015 | 7:04 am

எட்டாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

இன்று முற்பகல் 9.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது முதலாவது கடமையாக புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் வாக்கெடுப்பின் மூலம் சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்

அதனைத் தொடர்ந்து சபாநாயகரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோரும் இன்று (01) முற்பகல் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த நியமனங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் பிற்பகல் மூன்று மணி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்