களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் கலக்கப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்

களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் கலக்கப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்

களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் கலக்கப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2015 | 11:12 am

களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீர் கலக்கப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

பல அரச நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிகாரசபையினட தலைவர்​ பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்களை களனி கங்களையில் கலக்கும் நபர்கள் அடையாங்காணப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களனி கங்கையில் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு வரையான பகுதி பாரியளவில் அசுத்தப்படுத்தப்பட்டு வருவதாக சூழல் பராமரிப்பு அமைப்புகள் அண்மைக்காலமாக அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அண்மை சம்பவமாக நேற்று முந்தினம் மாலை களனி கங்கையில் எண்ணெய் கலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக களனி கங்கையிலிருந்து நீரை பெற்று அதனை சுத்திகரித்து கொழும்பின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கும் அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.
எவ்வாறாயினும் ஆற்று நீரில் கழிவுககை வீசாது , நீரை பாதுகாக்க வேண்டியது களனி கங்கையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பொறுப்பு என அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்