அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4429 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்

அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4429 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2015 | 11:20 am

அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4429 பேரை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச உதவி முகாமையாளர் சேவைக்காக கடந்த வருடத்தில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேருகளுக்கு அமைய புதிய உத்தியோகஸ்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

3027 பேர் திறந்த போட்டி பரீட்சையினூடாகவும் 1202 பேர் வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சையினூடாகவும் புதிய உத்தியோகஸ்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நேர்முக பரீட்சைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அரச உதவி முகாமையாளர் பதவிக்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அடுத்த மாதம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அரச நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்