முப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

முப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

முப்படையினர் கூட்டுப் பயிற்சி: விமானங்கள் பறந்தால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 10:20 am

செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை கூட்டுப் பயிற்சிகள் கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ள பிரதேசங்களின் வான் பரப்புகளில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் அரச தகவல் திணைக்கள இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்