மாத்தளை முச்சக்கரவண்டி சாரதிகள் மோதல்: பொலிஸார் பக்கசார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

மாத்தளை முச்சக்கரவண்டி சாரதிகள் மோதல்: பொலிஸார் பக்கசார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

மாத்தளை முச்சக்கரவண்டி சாரதிகள் மோதல்: பொலிஸார் பக்கசார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 4:25 pm

மாத்தளை, உன்னஸ்கிரிய – இம்பில்பிட்டிய சந்தியிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் பக்கசார்பாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை – உன்னஸ்கிரிய இம்பில்பிட்டிய சந்தியில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இடையில் கடந்த 24ஆம் திகதி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பிரச்சினை இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிட்டனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 26ஆம் திகதி இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த சுமார் எழு பேரைக் கொண்ட குழுவினர், முச்சக்கரவண்டி சாரதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மற்றுமொரு மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு ஒரு தரப்பினர் மாத்திரம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்