மது போதையில் வீட்டை சேதப்படுத்தியவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்

மது போதையில் வீட்டை சேதப்படுத்தியவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்

மது போதையில் வீட்டை சேதப்படுத்தியவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 5:35 pm

மது போதையில் வீட்டிற்கு சேதம் ஏற்படுத்திய சிலரைக் கைது செய்வதற்காக சென்றிருந்த வெலிகம பொலிஸார் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதையிலிருந்த மூவர் வெலிகம, முதுகம பகுதியின் வீடொன்றிற்கு நேற்றிரவு சேதம் ஏற்படுத்தினர்.

இதனால் வீட்டிலிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் பொலிஸ் அவசரப் பிரிவிற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ததன் பின்னர் சந்தேகநபர்களைக் கைது செய்ய சென்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டு அம்மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்