போலி முத்திரைகளுடன் கடித உறைகள்: விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல்

போலி முத்திரைகளுடன் கடித உறைகள்: விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல்

போலி முத்திரைகளுடன் கடித உறைகள்: விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 3:20 pm

நிட்டம்புவை தபால் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட போலி முத்திரைகள் ஒட்டப்பட்ட கடித உறைகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென தபால் தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டது.

போலி முத்திரைகள் ஒட்டப்பட்ட கடித உறைகள் கண்டெடுக்கப்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றபோதிலும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸாரால் இதுவரை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றபோதிலும், விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் கூறினார்.

போலி முத்திரைகளுடன் கடித உறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கம்பஹா விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதன்மூலம் கண்டறியப்படும் தகவல்களின் பிரகாரமே சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான சட்ட வழிமுறைகள் காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 24 ஆம் திகதி ரூபா 15 பெறுமதியான மூன்று போலி முத்திரைகள் வீதம் ஒட்டப்பட்ட 513 கடித உறைகள் நிட்டம்புவை தபால் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்