கிரீஸின் இடைக்காலப் பிரதமராக வாஸிலிகி தானு பதவியேற்பு

கிரீஸின் இடைக்காலப் பிரதமராக வாஸிலிகி தானு பதவியேற்பு

கிரீஸின் இடைக்காலப் பிரதமராக வாஸிலிகி தானு பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 12:38 pm

கிரீஸின் இடைக்காலப் பிரதமராக வாஸிலிகி தானு பதவியேற்றுள்ளார்.

கிரீஸில் பிரதமர் பதவியேற்கும் முதல் பெண் இவர்தான்.

பதவியேற்றதும் அவர் இடைக்கால அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

இவர் கிரீஸ் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.

சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றதைத் தொடர்ந்து, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான அரசு ஒப்புக்கொண்டது.

புதிய வரி விதிப்பு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கும் முடிவை பிரதமரின் கட்சி உறுப்பினர்களே கடுமையாக எதிர்த்தனர்.

பெரும்பான்மையை இழந்த நிலையில், பிரதமர் ஸிப்ராஸ் தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

மாற்று அரசு ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில், பாராளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை எழுந்தது.

தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால அரசு ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கிரீஸ் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான வாஸிலிகி தானு இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்பார் என அதிபர் புரோகோபிஸ் பவ்லோபுலோஸ் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வாஸிலிகி தானு பதவியேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்