கடல் மட்டம் 3 அடிவரை உயருமென நாசா எச்சரிக்கை

கடல் மட்டம் 3 அடிவரை உயருமென நாசா எச்சரிக்கை

கடல் மட்டம் 3 அடிவரை உயருமென நாசா எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 5:28 pm

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 3 அடி உயரும் என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் குழு பருவநிலை மாற்றம் குறித்தும், கடல் மட்டம் உயர்வு குறித்தும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 1 அடியிலிருந்து 3 அடி வரை உயரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

23 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெவியவந்துள்ளது.

இந்நிலையில், கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக அமையும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்