ஓமந்தை சோதனைச் சாவடி நீக்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி நீக்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 2:18 pm

ஏ-9 வீதியின் ஓமந்தை பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் மக்கள் பயணிப்பதற்கான ஒழுங்குகளை பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக நியூஸ்பெஸ்ட் வினவியதை அடுத்து, வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தகவலை உறுதிப்படுத்தினார்.

இதன் பிரகாரம், இன்று முதல் வழமைபோன்று ஏ-9 வீதியூடாக வடபகுதி நோக்கி மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் தொடர்புகொண்டு வினவியபோது, நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்