எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் பதவிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை

எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் பதவிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2015 | 10:08 pm

எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் அல்லது பாராளுமன்றத்தின் ஏனைய பதவிகள் தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடிய பின்னர் இது தொடர்பில் தீர்மானங்களை எட்டவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு செப்டம்பர் முதலாம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்விற்கான நடவடிக்கைகள் தற்போது பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய தேசியப் பட்டியல் உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்களையும் பெற்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒரு ஆசனம் வீதம் கைப்பற்றின.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்