தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2015 | 5:39 pm

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அல்லது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நிலையங்கள் நாளை காலை 6.30 க்கு திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களும் தேர்தல்கள் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் 0112 879 049, 0112 879 050 ஆகிய இலக்கங்களுக்கும், கம்பஹா – களுத்துறை மாவட்டங்களில் 0112 879 051, 0112 879 053ஆகிய இலக்கங்களுக்கும் கண்டி,மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 0112 879 054, 0112 879 056 ஆகிய இலக்கங்களிற்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்

காலி. மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக 0112 879 057, 0112 879 058 ஆகிய இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக 0112 879 059, 0112 879 060 ஆகிய இலக்கங்களும் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை மாவட்டங்களுக்காக 0112 879 062, 0112 879 063 ஆகிய இலக்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்