சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டல்

சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டல்

சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டல்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2015 | 4:46 pm

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (17) காலை 7 மணி முதல் ஆரம்பமாகவுள்ளன.

இயன்றளவு காலை வேளையிலே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிரச டிவியில் ஔிபரப்பான சட்டன அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

வாக்களிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பது நமது உரிமை எனவும் உங்களின் அதிகாரத்தை அச்சமின்றி சந்தேகமின்றி பயன்படுத்துங்கள், காலை வேளையிலேயே வாக்களிக்கவும், பிற்பகல் சென்று வாக்களிப்போம் என்று எண்ண வேண்டாம் எனவும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் பிரச்சினைகள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் ஆராயாது வாக்களித்த பின்னர் உங்களின் தொழில் தளங்களுக்கு, வீடுகளுக்கு செல்லுங்கள் என்றும் இதன் போது தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிக்கும் முறை தொடர்பிலும் தேர்தல்கள் ஆணையாளர் இந்த நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.

சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரினால் வழங்கப்பட்ட தெளிவூட்டல் #GenEleSL

Posted by Newsfirst.lk on Saturday, August 15, 2015


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்