அரபு மொழியில் வெளியாகவுள்ள ஐஸ்வர்யா ராய் திரைப்படம்

அரபு மொழியில் வெளியாகவுள்ள ஐஸ்வர்யா ராய் திரைப்படம்

அரபு மொழியில் வெளியாகவுள்ள ஐஸ்வர்யா ராய் திரைப்படம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2015 | 10:32 am

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜாஸ்பா. சஞ்சய் குப்தா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்திப் படங்கள் அரபு நாடுகளில் வெளியாவது வாடிக்கை. ஆனால், அவை இந்தி மொழியில்தான் வெளியாகும்.

ஆனால் ஜாஸ்பாவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து ஓமன், கத்தார், பஹ்ரேன், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வெளியிடுகின்றனர்.

ஈராக், ஜோ‌ர்டான் நாடுகளில் திரையிடவும் முயற்சிகள் நடக்கின்றன, ஒக்டோபர் 9 ஜாஸ்பா திரைக்கு வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்