வட்டிக்குப் பணம் கொடுத்ததால் கிடைத்த வருமானத்தையே வைப்பிலிட்டதாக வெலே சுதா தெரிவிப்பு

வட்டிக்குப் பணம் கொடுத்ததால் கிடைத்த வருமானத்தையே வைப்பிலிட்டதாக வெலே சுதா தெரிவிப்பு

வட்டிக்குப் பணம் கொடுத்ததால் கிடைத்த வருமானத்தையே வைப்பிலிட்டதாக வெலே சுதா தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:34 pm

வட்டிக்குப் பணம் கொடுத்தும் தென்னம் தோட்டத்தில் வந்த வருமானத்தைக் கொண்டுமே குறுகிய காலத்திற்குள் நடைமுறைக்கணக்கில் 13 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டதாக கம்பள விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.

7.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதியரசர் பிரிதி பத்மன் சுரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கூடுதலாக காணிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா என அரசசார்பு சிரேஷ்ட சட்டத்தரணி சுஹர்தி ஹேரத்தின் குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெலே சுதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணிகளில் கிடைக்கும் வருமானத்தை விட வட்டிக்குப் பணம் கொடுப்பதில் கூடுதலாக வருமானம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பிலியந்தலையில் தனியார் வங்கி ஒன்றில் தான் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்து பணத்தை வைப்பிட்டதாகவும் வெலே சுதா நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்