தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 8:51 am

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளை () முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாளை தொடக்கம் 18 ஆம் திகதிவரை மேலதிக போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் நான்கு நாட்களிலும் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் வெளிமாகாணங்களில் இருந்து கொழும்பு நோக்கியும் மேலதிக போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

தேர்தல் காலப்பகுதியில் தெற்கு அதிவேக பாதை ஊடாக கடுவெல, காலி மாத்தறை பிரதேசங்களுக்கான சேவைகளுக்கு மேலதிகமாக சில சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு நகர மண்டபத்திலிருந்து காலி – மாத்தறை வரையும் கடுவெலயில் இருந்து காலி – மாத்தறை வரையும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சொகுசு பஸ்கள் இணைந்த சேவையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்