சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு

சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு

சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 8:28 am

பொதுத் தேர்தலின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது .

சட்ட விரோத தேர்தல் பிரசாரம் குறித்து 217 முறைப்பாடுகள் இது வரையில் பதிவாகியுள்ளதாக தேர்ல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது .மேலும் சட்டவிரோத நியமனம் மற்றும் பதவி விலகல் என்பன தொடர்பில் 205 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றமை குறித்து 195
முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் 185 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அதே சமயம் அரச உத்தியோகத்தர்களை சட்ட விரோதமாக தேர்தலுக்கு ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 152 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றின் அடிப்படையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 1407 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்