சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளுடன் பி.திகாம்பரத்தின் ஆதரவாளர் கைது

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளுடன் பி.திகாம்பரத்தின் ஆதரவாளர் கைது

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:40 pm

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வைத்திருந்த அமைச்சர் பி.திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் லிந்துலை திஸ்பன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்கேநபரிடமிருந்து 24 போலி வாக்குச் சீட்டுகளும் அமைச்சர் பி.திகாம்பரத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கான 74 ஸ்டிக்கர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்