கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 4:59 pm

வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த அரச பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு ஒருமாத காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் கப்பலை நங்கூரமிட்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பில் இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரான சுஜாதா தமயந்தி ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளரான வடுகே பாலித பியசிறி பெர்னாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த பின்னர், ஒரு மாதகாலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு காலி பிரதம நீதவான், அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி காலி துறைமுக பொலிஸாரினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், கடந்த மே மாதம் 2ஆம் திகதி முதல் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்திருந்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்