ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால்

ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால்

ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே ஓட்டங்களை குவிக்க முடியவில்லை – தினேஸ் சந்திமால்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2015 | 9:38 am

ஆடுகளத்தின் தன்மையில் காணப்பட்ட மாற்றத்தினால் தமது அணி எதிர்பார்த்த ஓட்டங்களை பெற்றுக் கொள்வதில் தடுமாற்றத்தை எதிர் நோக்கியதாக இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றுள்ளது .

ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் காணப்பட்டது, நாம் எதிர்பார்த்ததை விட ஆடுகளத்தில் சுழற்சியின் தன்மை அதிகமாக காணப்பட்டது.

துரதிஸ்டவசமாக அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தமையால் எங்களால் ஓட்டங்களை பெற முடியாமல் போனது என தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக 100 ஓட்டங்களை பெற்றிருந்தால் அது மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்