மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கவுள்ளார் அசின்

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கவுள்ளார் அசின்

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கவுள்ளார் அசின்

எழுத்தாளர் Bella Dalima

11 Aug, 2015 | 2:54 pm

அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது.

இதனையடுத்து, இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

உமேஷ் சுக்லா இயக்கத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ஆல் இஸ் வெல்’ இந்திப் படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக மும்பை, டெல்லிக்கு பறந்து வருகிறார் அசின்.

அவர் திருமணத்தின் பின்னர் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இருவீட்டார் சம்மதத்துடனும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.

நிச்சயதார்த்தம் மற்றும் திருமண திகதிகளை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்