ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 7:24 pm

ஓட்டமாவடி பகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் ஓட்டமாவடி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வருகைத் தந்த சிலர், வீட்டின் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த இருவர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்