விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையை சுவைக்கவுள்ள நாசா விஞ்ஞானிகள்

விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையை சுவைக்கவுள்ள நாசா விஞ்ஞானிகள்

விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையை சுவைக்கவுள்ள நாசா விஞ்ஞானிகள்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 5:12 pm

விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையை நாசா விஞ்ஞானிகள் சுவைக்கவுள்ளனர்.

சிட்ரிக் அமிலத்தை கொண்டு கீரையை சுத்தப்படுத்தி அதனை விஞ்ஞானிகள் உண்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. மிகுதிக் கீரை பத்திரப்படுத்தப்படட்டு பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேடமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் உணவிற்கு ரூ.6 லட்சம் வரை செலவாகின்றது.

எனவே, செலவைக் குறைக்கும் வகையிலும் புதிய முயற்சியாகவும், வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகள் மற்றும் மரக்கறி வகைகளைப் பயிரிட நாசா திட்டமிட்டது.

இந்த முயற்சி முதன்முதலாக கடந்த 2014ல் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 33 நாட்களில் வளர்க்கப்பட்ட கீரை பின்னர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி ஆய்வு மையத்துக்கு கொண்டுவரப்பட்டு உணவுத் தர ஆய்வுக்கு உட்படுத்தியது.

அந்த வகையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ந்திருக்கும் கீரையை விஞ்ஞானிகள் குழு உண்ணத் தயாராக இருக்கிறது. வெஜ்- 01 என பெயரிடப்பட்ட கீரை வளர்ப்பு முறை பிரத்தியேகமாக 33 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இதே முயற்சி கடந்த 2010ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்