வசீம் தஜூடினின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில்

வசீம் தஜூடினின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில்

வசீம் தஜூடினின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 8:13 pm

றக்பி வீரர் மொஹமட் வசீம் தஜூடினின் சடலம் விசாரணைகளுக்காக இன்று தோண்டியெடுக்கப்பட்டது.

கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் மற்றும் மாவட்ட நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க மற்றும் கொழும்பு பிரதான சட்ட வைத்தியதிகாரி ஆகியோரின் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

தெஹிவளை ஜூம்மா பள்ளிவாசல் மயானத்தில் வசீம் தஜூடினின் ஜனாஸா புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணிகள் இன்று முற்பகல் 6.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன.

புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைவாகவே இந்த சடலம் ​தோண்டியெடுக்கப்பட்டது.

மயானம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் வசீம் தஜூடினின் சடலம் புதைக்கப்பட்ட இடம் மறைக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்களுக்கு மயானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்தனர்.

முற்பகல் 10 மணியளவில் சடலம் எடுக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சடலம் வசீம் தஜூடினினுடையது தானா என வினவப்பட்ட போது அதற்குப் பதிலளித்த வைத்திய அதிகாரி சடலம் புதைக்கப்பட்ட இடமானது குடும்ப உறுப்பினர்களாலேயே அடையாளம் காணப்பட்டது. தேவைப்பாட்டால் பின்னர் அதனை உறுதிப்படுத்த பரிசோதனை செய்யலாம் எனத் தெரிவித்தார்.

மோட்டார் வாகனமொன்றிற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் றக்பி வீரர் வசீம் தஜூடினின் சடலம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹென்பிட்ட ஷாலிகா மைதானத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

சுவர் ஒன்றில் மோதிய தஜூடீனின் வாகனம் பின்னர் தீப்பிடித்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டனர்.

அதன் பின்னர், அவருடையது என சந்தேகிக்கப்படும் பணப்பை சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் மீட்கப்பட்டது.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்ததை அடுத்து சடலத்தை தோண்டி எடுக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதே வேளை வசீம் தாஜூடினின் சடலத்தை கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் அங்கு சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்