மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 5:49 pm

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகயீனம் காரணமாக குறித்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நேற்றிரவு அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் களப்பினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்