பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் மீது தாக்குதல்

பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் மீது தாக்குதல்

பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 12:24 pm

பூண்டுலோயா பகுதியில் பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது சனிக்கிழமை(8) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர் எஸ்.மேனகா நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா – பூண்டுலோயா பகுதிக்கு பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்கள் சந்திப்பொன்றுக்காக சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனொன்றில் வருகைத் தந்த அமைச்சர் பி.திகாம்பரத்தின் ஆதரவாளர்கள் பொல்லுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடாத்தியதாக, தாக்குதலுக்கு இல்லக்கானோர் குறிப்பிட்டனர்.

அதன்பின்னர் தாக்குதலுக்கு இலக்கானன பிரஜைகள் முன்னணியின் ஆதரவாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்த நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் அவர்கள் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரஜைகள் முன்னணியின் வேட்பாளர் எஸ்.மேனகா நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விலை பேசுவதாக, அந்த முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரவிகுமார் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்