பிரஜைகள் முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வன்னி, நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன

பிரஜைகள் முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வன்னி, நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன

பிரஜைகள் முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வன்னி, நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 8:47 pm

வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஆச்சிகுளம், கனகராயன்குளம், மாகரம்பைகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றும் இன்றும் பல பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கபபட்டன.

ஆச்சிகுளம், கனகராயன்குளம், மாகரம்பைகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பிரஜைகள் முன்னணியின் ஆதரவாளர்கள், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் கடந்த பல வருடங்களாக ஆட்சி புரிந்து அரசியல்வாதிகள் தமக்கு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் 11 பெண் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த பிரசார நடவடிக்கையின் போது, பிரஜைகள் முன்னணியின் கொள்கைகள் தொடர்பில், உடபுஸ்ஸல்லாவை பகுதி மக்களை தெளிவூட்டினர்கள்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மலையகத்தில் 11 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் மேராயா பகுதியிலும் பிரஜைகள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், மஸ்கெலியா, பொகவந்தலாவை மற்றும் போகாவத்தை ஆகிய பகுதிகளிலும் நேற்றைய தினம் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்