பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 8:27 pm

றக்பி வீரர் வசீம் தஜூடீனின் மரணம் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மீண்டும் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்..

[quote]ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி .மற்றவர் புனர்வாழ்வு பெற்ற எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர். தற்போது பல முக்கிய விடயங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.[/quote]​

மேலும் அவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தியா எக்னெலிகொட தெரித்த கருத்து…

[quote]அந்த இராணுவ அதிகாரியை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கையளிக்குமாறு இராணுவத் தளபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஜனாதிபதியிடமும் கேட்டு கொள்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்