ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிர்மாணிக்க உத்தேசம்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிர்மாணிக்க உத்தேசம்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிர்மாணிக்க உத்தேசம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 8:00 pm

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம் தொடர்பில் இன்று ஜனாதிபதிக்கு தெளிவூட்டப்பட்டது.

ஜனாதிபதி செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக தெளிவூட்டினார்கள்.

அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம் புதிய தொழில் வாய்ப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்