அரசியற் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் மஹிந்த தேசப்பிரிய

அரசியற் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் மஹிந்த தேசப்பிரிய

அரசியற் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் மஹிந்த தேசப்பிரிய

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 9:37 pm

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று மீண்டும் சந்தித்தார். தேர்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த டிலான் பெரேரா :

[quote]எப்.சி.ஐ.டி எனப்படும் ரணிலின் பொலிஸ் எமது சுதந்திர கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை விசாரணை செய்து கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை தௌிவுபடுத்தினோம். 17 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு வேட்பாளர்களையும் தேசிய பட்டியலில் உள்ளவர்களையும் விசாரணை செய்வதை நிறுத்துவதாக அவர் எம்மிடம் கூறினார்.[/quote]

மேலும் கருத்துத் தெரிவித்த ஜே.ஶ்ரீரங்கா :

[quote]நுவரெலியா மாவட்டத்தில் மதுபானம் வழங்கப்படுகின்றமை தொடர்பில் நாம் அவதானத்திற்கு கொண்டு வந்தோம். பொலிஸ் மாதிபர் இதனை நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்