அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இரட்டையர் திருவிழா (Photos)

அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இரட்டையர் திருவிழா (Photos)

அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இரட்டையர் திருவிழா (Photos)

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2015 | 4:30 pm

அமெரிக்க நாட்டின், ஓஹியொ மாநிலத்தின் ‘டிவின்ஸ்பர்க்’ நகரில் 40 ஆவது ஆண்டாக இரட்டையர் திருவிழா கொண்டாடப்பட்டது.

அமெரிக்கர்கள் மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இரட்டையர்கள் இதில் பங்கேற்றனர்.

ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக நாற்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதே, இந்த திருவிழாவின் தனித்தன்மை.

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒரே மாதிரி உடைகளுடன், இந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

இவர்கள் தமது சகோதர, சகோதரிகளுடன் பல்வேறு அலங்காரங்களுடன், வித்தியாசமான உடைகளிலும் அணிவகுத்தனர்.

இதில், இரட்டையர் மட்டுமின்றி ஒன்றாக பிறந்த மூன்று பேர் குழுக்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தது.

tttt

ttt

tt

t3

Twin Days Festival--group shot.

34


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்