‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று

‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று

‘வேண்டாம்’ வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2015 | 11:46 am

தகுதியானவர்களை மட்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ‘வேண்டாம்’ என்ற தலைப்பில் மக்களை தெளிவூட்டும் விழிப்புணர்வு திட்டத்தின் ஒன்பதாவது நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு செங்களடி மற்றும் மஹஓயா ஆகிய பகுதிகளில் இன்று மக்களை தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

ஹம்பந்தோட்டை தங்கல்ல,திக்வெல்ல மற்றும் குடாவெல்ல பகுதிகளிலும் தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் கெஃபே அமைப்பு ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது, வாக்காளர்களின் கடமைகள் மற்றும் நிராகரிக்கப்படாத வகையில் எவ்வாறு வாக்கினை அளிப்பது என்பது தொடர்பிலும் இதன்போது மக்கள் தெளிவூட்டப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்