தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 529 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 529 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 529 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2015 | 9:53 am

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 529 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து 183 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறான சுற்றிவளைப்புகளினூடாக 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து கிடைத்த 223 முறைப்பாடுகளுக்கு அமைய 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அதரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்