ஊவா மாகாணத்திற்கான சிறந்த யூ- ரிப்போட்டர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

ஊவா மாகாணத்திற்கான சிறந்த யூ- ரிப்போட்டர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

ஊவா மாகாணத்திற்கான சிறந்த யூ- ரிப்போட்டர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2015 | 1:51 pm

ஊவா மாகாணத்தில் பிரஜைகள் ஊடகவியலில் திறமைகாட்டிய யூ ரிப்போட்டர்கள் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் ரி.ரி.எம்.ரிஜா மற்றும் மொனராகலையில் நதுன் நிமந்தக ஆகியோர் சிறந்த யூ ரிப்போட்டர்களாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை தபால் கட்டட கேட்போர் கூடத்தில் இன்று (09) முற்பகல் யூ – ரிப்போட்டர் மாநாடு இடம்பெற்றது.

இதன் போது பதுளை மாவட்டம் சார்பில் ரி.ரி.எம்.ரிஜா, பசிந்து பீரிஸ் மற்றும் கருனாதார ஆகியோரின் பெயர்கள் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டன்.

மேலும் மொனராகலை மாவட்டம் சார்பில் நதின் நிமந்தக , ஆனந்த சுனில் ரத்நாயக்க மற்றும் திமுத்து மதுசங்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்