வட கொரியாவில் நேர மாற்றம்: 30 நிமிடங்கள் குறைப்பு

வட கொரியாவில் நேர மாற்றம்: 30 நிமிடங்கள் குறைப்பு

வட கொரியாவில் நேர மாற்றம்: 30 நிமிடங்கள் குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 12:09 pm

வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட 30 நிமிடங்கள் குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானிய காலனியாதிக்கத்தின்போது, அவர்களால் திணிக்கப்பட்ட உள்ளூர் நேரம் தற்போது திருத்தியமைக்கப்பட்டு, அதற்கு முன்னர் இருந்த நேரம் கடைப்பிடிக்கப்படுவதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1910 முதல் 1945 ஆம் ஆண்டு வரை கொரியாவை ஆண்ட ஜப்பான் ஆட்சியாளர்கள் கிரீன்விச் நேரத்தைவிட 8.30 மணி நேரம் கூடுதலாக இருந்த கொரிய நேரத்தை, தங்களைப் போல் 9 மணி நேரம் கூடுதலாக மாற்றியமைத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்