மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 50 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு செயலி அறிமுகம்

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 50 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு செயலி அறிமுகம்

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 50 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு செயலி அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2015 | 4:48 pm

மைக்ரோசொஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு செயலியை (Translater App) அறிமுகம் செய்துள்ளது.

இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுளில் 27 மொழிகளுக்கு மாத்திரமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

மைக்ரோசொஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆண்ட்ரோய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது.

போன், டேப்லட், அப்பிள் வோட்ச், ஸ்மார்ட் வோட்ச் போன்றவற்றில் இதைப் பயன்படுத்த முடியும்.

ஒருவர் ஒரு மொழியில் பேசவோ, எழுதவோ (டைப்பிங்) செய்தால், அதை இன்னொரு மொழிக்கு (குறிப்பிட்ட 50 மொழிகளுக்குள்) மாற்றிக்கொள்ளமுடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்